சபாநாயகருக்கு முக்கிய கோரிக்கை வைத்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றைய தினம் தொடங்கியதும் அதில் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த நிலையில். இன்று சட்டப்பேரவை கூடியவுடன் சபாநாயகராக போட்டியில்லாமல் தேர்வான திமுகவின் சட்டசபை உறுப்பினர் அப்பாவு பதவி ஏற்றுக்கொண்டார். துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவுவை முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றிணைந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வேண்டுகோள் விடுக்கின்றார். அதில் எல்லா கட்சிகளுக்கும் பொதுவானவராக சபாநாயகருக்கு செயல்பட வேண்டும். உணர்ச்சி கோபம் எல்லாவற்றையும் தாண்டி ஒரு ஆசிரியர் போல நடந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் இதயமாக சட்டசபை விளங்கி வருகிறது. ஆகவே இதயம் சீராக இருக்க வேண்டும் அதிமுகவினர் நல்ல கருத்துக்களை எடுத்து வைக்க சபாநாயகர் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.