தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25% முதல் 100% வரை சொத்து வரி உயர்த்தப்படுகிறது. தற்போதுள்ள சொத்து வரியில் வணிக பயன்பாட்டிற்கான கட்டிடங்களுக்கு 100% தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் உயர்த்தப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டது அதற்கு எதிர்க்கட்சியான அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு சிறப்பான பரிசாக 150 சதவீதம் வரையில் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. சொத்து வரி உயர்வு வெறும் ஆரம்பம் தான் இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்கும் பல அதிரடி பரிசுகள் காத்திருக்கின்றன என்று சூசகமாக தெரிவித்திருக்கிறார்.