திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கடும் கண்டனம்!

Photo of author

By Sakthi

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் திமுகவை கண்டித்து போராட்டம் செய்து வருகின்றார். இந்த போராட்டத்தின்போது பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் உரையாற்றினார்.

அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கானல் நீராகிவிடும் என்பதைப்போல தெரிகிறது. இதன் காரணமாக தான் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக போராட்டம் நடந்து வருகிறது. நான் சேலத்தில் என்னுடைய வீட்டின் முன்பு என்னுடைய கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

திமுகவின் சார்பாக வெளியான தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் வெளியாகின. அதில் முக்கியமான அறிவிப்புகள் ஒன்று கூட இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். அதேபோல மாதம்தோறும் மின்கட்டணம் காணப்படும் என்று தெரிவித்தார் அதையும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை என கண்டனம் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.இது ஒரு பக்கம் இருக்கட்டும் தற்சமயம் எதன் அடிப்படையில் மின்கட்டணம் தற்சமயம் வசூல் செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை என தெரிவித்திருக்கிறார். உங்களுக்கு அதிகமான மின்கட்டணம் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறுங்கள் என்று அமைச்சர் சொல்கின்றார்.

வீட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன மீட்டர் மூலமாக கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிப்பது வழக்கம் இருந்தாலும் தோராயமாக இவர்கள் கணக்கிட்டு வசூல் செய்வதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் பலருக்கும் மின்கட்டணம் சொல்ல இயலாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்து அதனை செயல்படுத்தியது அதிமுக அரசு. அடிக்கடி மின்வெட்டு உண்டாகி கொண்டு இருக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் தமிழகம் ஒரு மின்மிகை மாநிலம் என்ற ஒரு நிலையில் அதிமுக வைத்திருந்தது என்றும் கூறியிருக்கிறார்.

திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் எதையுமே இதுவரையில் நிறைவேற்றவில்லை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாத ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசை பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

பொதுமக்கள் கேள்வி கேட்பதை திசை திருப்புவதற்காக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்யான புகார்களை தெரிவித்து திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சோதனை நடத்துவது ,பொய் வழக்குப் போடுவது, மருத்துவம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது இந்த அரசு. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.