அப்பல்லோ விற்கு விரைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

அதிமுகவின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன் அவர்களுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதோடு அவர் தானாக சுவாசிக்க சிரமப்படும் காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் மூலமாக சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திரு. மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் அவர்கள் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மதுசூதனன் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.அதோடு ஓபிஎஸ்,இபிஎஸ் உள்ளிட்டோருக்கு இடையில் பிரச்சினைகள் எழுந்த சமயத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக குரல் கொடுத்த முக்கிய தலைவர்களில் ஒருவர்தான் இந்த மதுசூதனன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு இவர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்து இருக்கின்றார். இந்த நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற மதுசூதனன் அவர்களின் உடல் நலம் குறித்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சருமான தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருடைய உடல் நலம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு இருக்கின்றார்.