ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவன் மாயம்! போலீசார் விசாரணை!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவன் மாயம்! போலீசார் விசாரணை!

Parthipan K

Erode district school student illusion! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவன் மாயம்! போலீசார் விசாரணை!

பெருந்துறையை அடுத்துள்ள  நசியனூர்  ராயபாளையம்  மரம்புளியன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகன் ஸ்ரீதர் (14). இவர் நாசியனூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் வழக்கமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் மதியமே வீடு திரும்பி உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரத்தின்  தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

வெகு நேரம் ஆகியும் மாணவர் ஸ்ரீதர் வீடு திரும்பவில்லை அதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ஸ்ரீதரின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீதரை யாரேனும் கடத்திச் சென்றுள்ளார்களா அல்லது விபத்து ஏதேனும் நடந்துள்ளதா எனும் கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.