ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண் மாயம்! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண் மாயம்! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சென்னிமலை  மூகாசி பிடாரியூர் பகுதியை  சேர்ந்தவர்  17 வயது இளம்பெண். இந்த பெண்  அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வருவார்.  மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் வேலைக்குச் சென்றுள்ளார் . ஆனால்  அந்த இளம் பெண்  வெகும் நேரம் ஆகியும்  வீடு திரும்பாத காரணத்தால்  பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் அவரை தேடி ஆரம்பித்தனர்.

மேலும் பல்வேறு இடங்களில் தேடியும் அந்தப் பெண் கிடைக்காத நிலையில் சென்னிமலை போலீசாரிடம் புகார் அளித்தனர் அந்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் வேலைக்குச் சென்ற இளம்பெண் மாயமான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் அந்த பெண்ணை யாராவது கடத்தி சென்றுள்ளர்களா என சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்கள்.