ஈரோடு சட்டமன்றம் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைத்த நிலையில் அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் 5 – ஆம் தேதி மறு தேர்தல் நடை பெரும் என தேர்தல் அனையம் அறிவிப்பை வெளிப்படுத்தியது. அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்து உள்ளனர்.
இந்நிலையில் அந்த தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகள் கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி, அக்ரஹாரம், காளை மாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா ஆகிய இடங்களில் பறக்கும் படையினரை வைத்து வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து வாகனத்தில் எடுத்து செல்லப்படும் பொருட்களுக்கு உண்டான உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறது. சம்மந்தப்பட்ட ஆவணங்கள் இல்லாமல்
பணம் எடுத்து செல்லுதல் மற்றும் வாக்களருக்கு பரிசு பொருள்கள் தருவதை தடுக்கும் விதமாக இந்த கண்காணிப்பு சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் ஆய்வுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.இச்சம்பவத்தை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மேயர் மற்றும் துணை மேயர் அறைகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.