Breaking News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல்வரின் கையை மீறும் சீட்டு!! இளங்கோவன் மகன் சஞ்சய்க்கு காங்கிரஸ் ஆதரவு!!

Erode East by-election ticket that defies the Chief Minister's hand!! Congress supports Elangovan's son Sanjay!!

ஈரோடு கிழக்கு: தொகுதிக்கு இரண்டாவது முறையாக நடைபெறும் இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இளங்கோவன் அவரது மகன் சஞ்சய் சம்பத் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டுமென ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் முன்னதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் அவரது மகன் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் காலமானார். அதனை எடுத்து 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார்.

அதனை அடுத்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவினால் இறந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறது. மேலும் இந்த இடைத்தேர்தல் ஆனது ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தான் தொகுதியை ஒதுக்க வேண்டும்.

இந்த தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு தான் ஒதுக்க வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை  வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் சமூக வலைத்தளம் உபயோகிக்க அனுமதி இல்லை.. புது சட்டம் அமல்!!

தொடரும் பட்டாசு ஆலை விபத்து அரசின் மெத்தனப் போக்குதான் காரணம்!! எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்!!