Erode By Election: ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
விஜய் தனது திரை பயணத்தை விட்டு அரசியலில் முழு மூச்சாக இறங்கப் போகிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதற்கேற்றார் போல் கடந்த வருடம் விக்கிரவாண்டியில் மாநாடும் நடைபெற்றது. இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவரின் பலம் என்ன என்பது இந்த மாநாட்டின் மூலம் பலருக்கும் உரைத்தார்.
இவ்வாறு இருக்கையில் தமிழக வெற்றிக் கழகமானது இடையில் வரும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் எங்களின் நோக்கம் ஒன்றே தான் அது சட்டமன்ற தேர்தல் என மாநாட்டில் கூறியிருந்தார். அதேபோல அடுத்தடுத்து வரும் அனைத்து தேர்தல்களையும் புறக்கணித்து வருகிறார். தற்பொழுது மூன்றாவது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.
ஆனால் இது குறித்து இல்லை என்ற அறிவிப்பானது திட்டவட்டமாக கூறியிருப்பினும் காலை 10 மணி அளவில் பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் முன்பே திட்டமிட்டப்படி தேர்வு செய்து இது குறித்து முடிவுகள் வெளியிடப்படும் எனக் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி ஈரோடு கிழக்கின் வேட்புமனு தாக்கல் செய்வதும் இன்றிலிருந்து தான் தொடங்கியுள்ளது. இந்த கிழக்கு தொகுதியில் போட்டியிட ஏதேனும் ஆலோசனை செய்யப்படுமா என்று எதிர்பார்ப்பு தவெக நிர்வாகிகளிடம் இருந்து. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளனர்.