ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று தேதி அறிவிப்பு!! களமிறங்குமா அ.தி.மு.க!!

ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும்  ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான இடைத்தேர்தல் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தல் மற்றும் இல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைப்பெற இருக்கும் இடைத்தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்த இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்துவார்களா இல்லை திமுக பலம் இந்த தொகுதியில் நிருபிக்கபடுமா என வாக்காளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் இந்த முறை அதிமுக வேட்பாளர் நிறுத்துமா இல்லை போன இடைத்தேர்தல் போல போட்டி போடாத? என கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த முறை புதிதாக துவங்கிய நடிகர் விஜய் அவர்களின் தவெக கட்சி போட்டி போடுமா என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.