திருமணம் ஆன பிறகும் நாடக காதல் செய்யும் வாலிபர் : பல பெண்கள் சீரழியும் அதிர்ச்சி பின்னணி!

0
146

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டும் ஆக்டிங் டிரைவர் உமர் ஷெரீப் தம்பிக். டாக்சி டிரைவரான உமருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

அதே பகுதியில் ஆன்லைன் விற்பனை செய்து வரும் பெண் ஷர்மிளா என்கிற ஹைரூநிஷா. கணவரால் கைவிடப்பட்ட ஷர்மிளா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

உமர் டிக்டாக்கில் விதவிதமான காதல் பாடலுக்கு சினிமா ஹீரோக்களை போல நடித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரின் டிக்டாக் வீடியோக்களை ரசித்து பார்த்து வந்த ஷர்மிளாவிடம் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து நட்பாக பழகியுள்ளார்.

ஆரம்பத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து டிக் டாக்கில் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த பழக்கத்தால் இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி பெட்ரூம் வரை கொண்டு சென்றுள்ளது.

இதனால் சர்மிளா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் கேட்டுள்ளார். இதற்கு உமர் சில மாதங்கள் போகட்டும் என்று கூறி அவருடனான உறவை தொடர்ந்து வந்துள்ளார்.

இதற்கிடையில் பொறுமை இழந்த சர்மிளா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி உமரை வற்புறுத்தியுள்ளார். இதற்கு உமர் 10 பவுன் நகை மற்றும் 20,000 ரூபாய் பணத்தை கொண்டு வந்தால் தான் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் சர்மிளா அவர் கேட்டபடியே பணத்தையும் நகையையும் கொடுத்துள்ளார். அதை வாங்கிக் கொண்ட உமர் கம்பி நீட்டிவிட்டு ஷர்மிளாவுக்கு தெரியாமல் தலைமறைவாகிவிட்டார்.

அதன் பிறகு ஷர்மிளாவிடம் போனில் பேசுவதையும் நேரில் பார்ப்பதையும் உமர் தவிர்த்து வந்துள்ளார். உமரின் நடவடிக்கை மீது சந்தேகம் வந்து விசாரித்தபோது அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது ஷர்மிளாவுக்கு தெரியவந்தது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா உமருக்கு போன் போட்டு தன்னுடைய நகைகளை தரச் சொல்லி கேட்டுள்ளார். இதற்கு உமர் ‘பணத்தை கேட்டால் நீயும் நானும் படுக்கையில் நெருக்கமாக இருந்த படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்.

இதனால் செய்வதறியாது தவித்த ஷர்மில ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்து காவல்துறை உமர் ஷெரீப் தம்பிக்கை சுற்றி மடக்கி பிடித்துள்ளனர்.

உமரையும் ஷர்மிளாவையும் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் உமர் பல பெண்களுடன் பழகி இவ்வாறு நாடக காதல் செய்து மிரட்டி வந்ததாக தெரிகிறது.

டிக்டாக்கில் வீடியோ போடும் உமர் பல பெண்களுடன் ஒரே மாதிரியான பாடலுக்கு டூயட் பாடுவது வழக்கமாம். அவ்வாறு தன்னுடன் நட்பாக பேசும் பெண்களிடம் முதலில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்வாராம்.

அதன் பிறகு தன்னுடைய இன்னொரு ஃபேக் ஐடி மூலம் அதே பெண்களிடம் தான் திருமணம் ஆகாத இளைஞன் என்று கூறி பழகுவாராம். பின்னர் இதே பாணியில் அந்தப் பெண்களிடம் உறவு வைத்துக் கொண்டு அதனை வீடியோவாக எடுத்து பணம் கேட்டு மிரட்டுவது வழக்கமாம் என்று தெரியவந்துள்ளது.

ஷர்மிளாவை போல தைரியமாக புகார் அளித்ததால் இதுபோன்ற மோசடி பேர்வழிகள் சிக்குகிறார்கள் என்று காவல்துறையினர் கூறிவருகின்றனர். டிக் டாக்கில் பொழுதுபோக்க சென்று அதற்கு அடிமையாகும் பெண்கள் இவரைப்போன்ற நாடக காதல் புள்ளிங்கோவிடம் சிக்கி சீரழிவது வேதனையாக உள்ளது என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன?
Next articleகாய்கறிகளை சாலையில் கொட்டிய விவசாயி : தேடி பிடித்து போலீஸ் நடவடிக்கை!