நம் பாரம்பரிய சிறு தானியங்களில் ஒன்று கம்பு.இது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.இந்த கம்பில் கூழ்,சாதம்.தோசை,முறுக்கு போன்ற உணவு வகைகள் செய்து உண்ணப்படுகிறது.
இந்த கம்பில் செய்யப்பட்ட லட்டுவை சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் இரும்பு போன்று வலிமையாகும்.
தேவையான பொருட்கள்:
1)கம்பு – ஒரு கப்
2)நெய் – ஐந்து தேக்கரண்டி
3)வெல்லம் – அரை கப்
4)ஏலக்காய் – இரண்டு
செய்முறை விளக்கம்:
அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அடுப்பை பற்ற வைக்கவும்.பிறகு அதில் ஒரு கப் கம்பு சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
பிறகு இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அரை கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்சவும்.
பின்னர் இரண்டு ஏலக்காயை அரைத்து வெல்லப் பாகுவில் சேர்க்கவும்.அடுத்ததாக அரைத்த கம்புத் தூளை அதில் கொட்டி நன்கு கலந்து விடவும்.அதில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து விடவும்.
கம்புத் தூள் பாகுவில் நன்கு கலந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.கம்பு கலவையை லேசாக ஆறவிட்டு கையில் நெய் தடவி கொண்டு லட்டு போல் உருட்டிக் கொள்ளவும்.
இந்த கம்பு லட்டுவை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் ஒரு கம்பு லட்டு செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு இரும்பு போல் வலிமையாக இருக்கும்.