60 வயதானாலும் நெஞ்சு வலி வராமலிருக்க வீட்டிலிருக்கும் செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

உலகில் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மார்பு வலி,மார்பு பகுதியில் கூர்மையான ஆயுதம் குத்துவது உணர்வு,மார்பு எரிச்சல் மற்றும் மார்பு அழுத்தம் போன்றவை இதயம் தொடர்பான பாதிப்புகள்.இதய வலி ஏற்பட்டால் அதை அலட்சியமாக கருதாமல் உரிய தீர்வு காண வேண்டியது அவசியம்.

மாரடைப்பு வராமலா இருக்க தினமும் செம்பருத்தி இதழில் டீ செய்து குடித்து வரலாம்.செம்பருத்தி பூ,இலை இரண்டும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.செம்பருத்தி இலை தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக விளங்குகிறது.அதேபோல் செம்பருத்தி பூ சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கின்றது.

செம்பருத்தி பூவின் இதழ் மாரடைப்புக்கு மருந்தாக திகழ்கிறது.இது இதயத்திற்கு தேவையான வலிமையை கொடுக்கிறது.இதய தசைகள் சிரமமின்றி சுருங்கி விரிய செம்பருத்தி இதழ் உதவுகிறது.

தினமும் செம்பருத்தி இதழில் தயாரித்த தேநீரை பருகி வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிட முடியும்.

10 செம்பருத்தி பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.செம்பருத்தி இதழை தொட்டால் நொறுங்கும் பதத்தில் இருக்க வேண்டும்.இந்த செம்பருத்தி இதழை மிக்ஸி ஜாரில் போட்டு நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு அரைத்த செம்பருத்தி இதழ் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி தேநீர் சிறந்த தீர்வாக விளங்குகிறது.