‘இனி சிபிஎஸ்இ பள்ளியில் படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்’..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

Photo of author

By Vinoth

‘இனி சிபிஎஸ்இ பள்ளியில் படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்’..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

Vinoth

1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்கள், எந்த பள்ளியில் படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, மும்மொழி கொள்கையை ஏற்றால் தான், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். ஆனால், மார்ச் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்ட பட்ஜெட்டின்போது பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில அரசு ரூ.2,000 கோடி நிதியை இழந்தாலும், இருமொழிக் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதற்கிடையே, அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்கிற வித்தியாசமின்றி, அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு கோடி பேர் கையெழுத்து என்ற இலக்கு வைத்து தொடங்கப்பட்டுள்ளது. மேலும், சமக் கல்வியான மும்மொழிக் கல்வியை, நம் குழந்தைகள் பயிலும் தமிழக அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வருவோம் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “2025ஆம் ஆண்டில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்கள், எந்த பள்ளியில் (சிபிஎஸ்இ) படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ள நிலையில், தற்போது அன்பில் மகேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.