எங்க வீட்டு நாய் கூட இத சாப்பிடாது ..உணவில் புழுக்கள் மேய்ந்ததால் கதறி அழுத போலீஸ்?..

Photo of author

By Parthipan K

எங்க வீட்டு நாய் கூட இத சாப்பிடாது ..உணவில் புழுக்கள் மேய்ந்ததால் கதறி அழுத போலீஸ்?..

உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகரில் காவல் பணியில் ஒரு போலீசார் ஈடுபட்டு வந்தார்.பணி முடிந்தவுடன் சாப்பிடுவதற்காக உணவகம் அறைக்கு சென்றார்.அப்போது சாப்பிட வந்த மனோஜ் குமார் திடிரென்று  போலீஸ் கான்ஸ்டபிள் கையில் தட்டுடன் வெளியில் வந்து திடீரென குமரி அழ தொடங்கினார்.

அவரை சுற்றியிருந்தவர்கள் என்ன அச்சு? ஏன் அழுகிறிர்கள் என்று கேட்டனர்.அந்த போலிசார் அழுதுகொண்டே போலீசாருக்கான இந்த உணவகத்தில் வழங்கப்படும் உணவை எல்லோரும் பாருங்கள் என்றார். பச்ச தண்ணீர் கலந்த பருப்பு குழம்பு அரைகுறையாக சமைக்கப்பட்ட கோதுமை ரொட்டி அதில் புழுக்கள் வேற!..

எங்களை போன்ற போலீசாருக்கு இதுதான் வழங்கப்படுகிறது என்றார்.மூத்த போலீஸ் சூப்பிரெண்டு அதிகாரிகளிடம் பல முறை இதுபற்றி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை . 12 மணிநேரம் பணி முடிந்த பின்னர் அனைத்து போலீசாரும் இதனையே உணவாக உண்கின்றனர்.இந்த உணவை ஒரு நாய் கூட சாப்பிடாது.

நாங்கள் இந்த உணவை சாப்பிட முடியாது. எங்களது வயிற்றில் எதுவும் இல்லாதபோது நாங்கள் எப்படி எங்களுடைய கடமைகளை செய்ய முடியும்? என கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.போலீசாருக்கு ஊட்டச்சத்து உணவு உறுதி செய்யப்படுவதற்காக அவர்களுக்கு  செலவுதொகை அதிகரிக்கப்படும் என முதல் மந்திரி யோகி அவர்கள் உறுதியளித்த போதிலும், தரம் குறைந்த உணவையே அவர்கள் வழங்குகின்றனர்.

இதற்கெல்லாம் மூத்த போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் டி.சி.பி.யின் ஊழலே முழு காரணம். அவர்களாலேயே போலீசாருக்கு தரமற்ற உணவு வினியோகிக்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார். இதுபற்றி மனோஜ் புகார் அளித்ததும் உணவாக மேலாளர் பணியிலிருந்து நீக்கி விடுவேன் என மனோஜை மிரட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் உணவு மற்றும் தனது போராட்டம் ஆகியவற்றை வீடியோவாக சமூக ஊடகத்தில் வெளியிடவும் மனோஜ் முடிவு செய்துள்ளார்.அதன்பின்னரே இந்த போராட்டத்தில் அவர் ஈடுபட்டுவுள்ளார்.இந்த வழியே கடந்து செல்லும் கேப்டன் சாரிடம் கூட பேசியுள்ளேன்.

இந்த தட்டிவுள்ள ரொட்டியை நீங்கள் சாப்பிட்டு பாருங்கள் என அவரிடம் கூறினேன். அவருக்கு தெரியும் அவரது போலீசார் என்ன சாப்பிடுகிறார்கள் என்று. அவருடைய குழந்தைகள் இதுபோன்ற உணவை சாப்பிடுவார்களா? என அவரிடம் கேட்க விரும்புகிறேன் என்று கண்ணீர் மல்க மனோஜ் கூறியுள்ளார்.

இவையெல்லாம் நடந்த பின்னர் சக போலீசார் அவரை அந்த பகுதியில் இருந்து அழைத்து சென்றனர். அவரது கண்ணீர் பேச்சு அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும்  பிரோசாபாத் போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி வட்ட அதிகாரியிடம் கேட்டு கொண்டுள்ளனர்.இதனால் அங்கு வேடிக்கை பார்த்த அனைவரும் கண் கலங்கி நிற்று அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.