நமது சமையலில் பல்வேறு காய்கறிகளை பயன்படுத்துகின்றோம்.சில காய்கறிகள் உங்களுக்கு பிடித்தமானவையாக இருக்கலாம்.சிலவற்றை பிடிக்காத காய்கறி லிஸ்டில் சேர்த்துவிடுவீர்கள்.இதில் வெண்டைக்காயும் அடங்கும்.
வெண்டைக்காய் மற்ற காய்கறிகள் போல் அல்லாமல் வழுவழுப்பு தன்மை கொண்டவை என்பதால் இதை சாப்பிட பெரும்பாலானோர் விரும்புவதில்லை.ஆனால் இந்த வெண்டைக்காயில் குழம்பு,வத்தக்குழம்பு,பொரியல்,சில்லி,கிரேவி போன்றவை செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
வெண்டைக்காயில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.நார்ச்சத்து,கால்சியம்,வைட்டமின்கள்,புரதம்,இரும்பு போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் வெண்டைக்காயில் நிறைந்திருக்கிறது.
வெண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.உடல் எடையை குறைக்க வெண்டைக்காயை நறுக்கி தண்ணீரில் ஊறவைத்து பருகலாம்.வெண்டையில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.
வெண்டைக்காயில் வைட்டமின் ஏ நிறைந்திருகிறது.அதேபோல் பீட்டா கரோட்டின் என்ற கண் பார்வையை கூர்மையாக்கும் ஊட்டச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.இந்த வெண்டை காயை உணவாக சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறன் மேம்படும்.
வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வெண்டைக்காய் உணவை உட்கொள்ளலாம்.கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க வெண்டைக்காய் உட்கொள்ளலாம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வெண்டைக்காய் உதவுகிறது.இரண்டு வெண்டைக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.பிறகு இந்த நீரை வடிகட்டி பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
மூளை ஆரோக்கிய திறன் மேம்பட வெண்டைக்காய் உணவுகளை உட்கொள்ளலாம்.சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக வெண்டைக்காய் உட்கொள்ளலாம்.ஆஸ்துமா பாதிப்பிற்கு அருமருந்தாக வெண்டைக்காய் திகழ்கிறது.பச்சை வெண்டைக்காயை காலை நேரத்தில் சாப்பிட்டால் அல்சர் பாதிப்பு குணமாகும்.