விஜயினுடைய அரசியல் மாநாட்டை விமர்சனம் செய்ததற்கு சிறுவன் கூட முறைக்கிறான்!! நடிகர் மற்றும் திமுக உறுப்பினர் போஸ் வெங்கட்!!

Photo of author

By Gayathri

அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அன்று விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு இலட்சக்கணக்கான தொண்டர்கள் கூட வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்த மாநாடு குறித்து பலரும் பல விதமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வந்து நிலையில் திமுக ஆதரவாளரான போஸ் வெங்கட் அவர்கள் இன்ஸ்டால் தன்னுடைய கருத்தை பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்ட கருத்தானது :-

“யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு”

இது விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய கோவத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. இதன் மூலம் இவர் செல்லும் இடமெல்லாம் விஜயினுடைய ரசிகர்கள் இவரை முறைத்த வண்ணம் இருந்துள்ளனர். அது குறித்து இவர் பகிர்ந்துள்ள சில தகவல்கள், இப்போ, நான் ரோட்டில் சென்றால் சின்ன பையன் கூட முறைச்சிட்டு போறான். அவன் விஜய் ரசிகன்தான் என எனக்கு தெரியும். நான் ஹோட்டல் போன போது ஒருவர் என்னை பார்த்ததும் சிடு சிடுத்தார். நீங்க என்ன விஜய் ரசிகரா என்று அவரிடத்தில் கேட்டேன். அவர் சிரித்தார். அரசியல் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசியவர், நானும் விஜய்க்கு ரசிகன் தான். முதல் நாள் அவர் படம் பார்ப்பேன். நான் அரசியல் களத்தில் தான் அவரை எதிர்த்து பேசினேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.