எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்!!

Photo of author

By Savitha

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்!!

Savitha

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்!
எவரெஸ்ட் மலை சிகரத்தை அடைந்து கீழே இறங்கும் பெழுது ஆஸ்திரேலியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா பெர்த் நகரை சேர்ந்த 40 வயதான மலையேற்று வீரர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் சமீபத்தில் 8849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறினார்.
வெற்றிகரமாக ஏறிய பின்னர் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்கும் பொழுது ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழிகாட்டிகள் உதவியோடு முகாம் நோக்கி வரும் வழியில் கடுமையான காற்று வீசியதால் ஜேசன் பெர்னார்ட் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் மயங்கி விழுந்த இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறும் மலையேற்ற வீரர்களால் “மரண மண்டலம்” என்று அழைக்கப்படும் 8000 மீட்டர் உயரம் உள்ள மலைப்பகுதியில் ஜேசன் இறந்துள்ளார். இறந்த ஜேசன் அவர்களின் உடல் அவர் இறந்த இடத்திலேயே இன்னும் இருக்கின்றது. ஜேசன் அவர்களின் உடலை மீட்டு மலைக்கு கீழே கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இவரது மரணச் செய்தியை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சியையும் வேதைனையையும் அடைந்துள்ளனர். மிகவும் தைரியமான கென்னிசன் சிகரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை அடைந்தார். ஆனால் துர்திர்ஷ்டவஷமாக அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்துடன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
எவரெஸ்ட் மலை சிகரத்தில் மலையேற்றத்துக்கான இந்த சீசனில் இது பத்தாவது மரணம் ஆகும். நேபாள நாட்டு சுற்றுலா துறையின் தகவலின்படி இது வரை 450 பேர் எவரெஸ்ட் சிகரத்தை ஏறியுள்ளனர்.