தனிநபருக்கு சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Photo of author

By Rupa

தனி நபர்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பொதுநலனுக்காக அரசு கையகப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியலமைப்பின் 39(பி) பிரிவின் கீழ் தனிநபருக்குச் சொந்தமான ஒவ்வொரு தனியார் சொத்துகளையும் பொதுநலனுக்காக என கையகப்படுத்த  முடியாது அதற்கான உரிமை அரசுக்கு இல்லை என செவ்வாய்க்கிழமை  அன்று தீர்ப்பளித்தது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39B இல் கூறியுள்ளது படி “தனியார் சொத்து ‘சமூகத்தின் பொருள் வளத்தை’ உருவாக்கலாம், ஆனால் ஒரு தனிநபருக்கு சொந்தமான ஒவ்வொரு வளமும் சமூகத்தின் பொருள் வளம் என்று கூற முடியாது” அதனால் அரசு அந்த சொத்துக்களை கையகப்படுத்த முடியாது என தீர்ப்பில் கூறியுள்ளனர்.

நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், பிவி நாகரத்னா, ஜேபி பர்திவாலா, சுதன்ஷு துலியா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிண்டல், சதீஷ் சந்திர ஷர்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் இந்த அமர்வில் இடம் பெற்றுள்ளனர். இதில் நீதிபதிகள் 7 பேரின் தீர்ப்பானது  ஒருமித்ததாக உள்ளது. மீதமுள்ள 2 பேரின் தீர்ப்பானது இதிலிருந்து சற்று வேறுபட்டு உள்ளது.

இதற்கு முந்தைய விசாரணையில், தனிநபரின் சொத்தானது பொதுவானதாக மாற்ற முடியாது என கூறியுள்ளார்.

மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளில் (DPSP) பிரிவு 39(b) கூறுவதாவது, “அரசு, குறிப்பாக, சமூகத்தின் தனிப்பட்ட உரிமையும் கட்டுப்பாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் அதன் கொள்கையை வழிநடத்துமே தவிர கையகப்படுத்த முடியாது.

முன்னதாக நடைபெற்று முடிந்த பல்வேறு வழக்கு விசாரணைகளில் இது போன்ற தீர்ப்புகளை வழங்கியுள்ளதையும் நீதிபதிகள் மேற்கோள் காட்டியுள்ளனர். அதில் 1978 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மற்றும் ANR Etc vs ஸ்ரீ ரங்கநாத ரெட்டி & ANR இடையேயான வழக்கில் வழங்கிய தீர்ப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது