கர்ப்பப்பை இறக்கம்! ஒவ்வொரு பெண்ணும் தெரிஞ்சுக்கணும்!

Photo of author

By Kowsalya

கர்ப்பப்பை இயல்பாகவே நான்கு பக்கமும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதசைகளால் சூழப்பட்டவை. அதனால் தான் ஓர் அங்குல வயிற்றில் குழந்தை வளரும் போது அதற்கேற்ப தசைகள் விரிவடைவதும், பிறகு தனது இடத்துக்குள் சுருங்கி கொள்வதுமாய் இருக்கிறது.

இவை இருக்குமிடத்தில் இருந்து தள்ளி கீழிறிங்கி வருவது தான் கருப்பை இறக்கம் என்று அழைக்கப்படுகிறது.

 

​அறிகுறிகள்:

 

1. கர்ப்பப்பையைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுவிழந்து பலவீனம் அடையும் போது தான் கர்ப்பப்பை இறக்கம் நிகழ்கிறது. அப்போது கர்ப்பப்பை அருகில் இருக்கும் குடல், சிறுநீரகப்பை. மலக்குடல் மூன்றின் அருகில் இருப்பதால் இவை அழுத்தும் போது சிறுநீர் பிரச்சனை உண்டாகிறது.அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் கழிக்கும் உணர்வு இருப்பது, சிறுநீர் கழிக்கும் போது வலி உண்டாவது. , தும்மும் போதும் சிறுநீர் வெளியேறுவது, மலச்சிக்கல் ஏற்படுவது போன்றவை கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறிகள்

 

2. கர்ப்பப்பை இறங்கும் போது அவை சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலை சேர்த்து இழுப்பதால் இடுப்பில் வலி உணர்வு அதிகரிக்கும். ஒரு வேளை கர்ப்பப்பை இறக்கமாக இருந்தால் வித்தியாசத்தை நன்றாக உணர்வீர்கள்.

 

3. வெள்ளைப்படுதல் இயல்பானது. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு முந்தைய நாட்களில் வெள்ளைப்போக்கு இருக்கும். வெள்ளைபோக்கு துர்நாற்றத்துடன், வெளிறிய நிறத்தில் இருப்பது கருப்பை பிரச்சனைகளை குறிக்கும்.ஆனால் கர்ப்ப்பை இறக்கத்தால் உண்டாகும் வெள்ளைபோக்கு சாதாரணமாக இருக்கும்.

 

4. சிலருக்கு கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறியாக பெண் உறுப்பில் உலர்வுத்தன்மை, அந்த இடத்தில் அரிப்பு, சொரிந்து புண் இவை தொடர்ந்து ஏற்படும்.

 

5. உடலுறவு கொள்ளும் போது யோனி பகுதி அருகில் கர்ப்பப்பை வாய் இறங்கியிருந்தால் அவை அதிக அசெளகரியத்தை உண்டு செய்யும். உடலுறவில் திருப்தியின்மை, உறவு கொள்வதில் சிக்கல், உறவுக்கு பின் ரத்தபோக்கு போன்ற அறிகுறிகள் கூட இதன் காரணமாக இருக்கலாம். இதை தொடர்ந்து தான் படிப்படியாக சிறுநீர்ப்பை, மலச்சிக்கல் பிரச்சனை உருவாகக்கூடும்.

 

6. திடீரென வரும் தும்மல், தொடர்ச்சியான இருமல் போன்ற காலகட்டங்களில் வயிற்றுக்குள் குழந்தையின் அசைவு போன்றூ கருப்பை இறங்குவது போன்ற உணர்வு ஏற்படும். சதைப்பகுதி கீழ்ப்பாகத்தில் உரசுவது போன்று இருக்கும். வேகமாக நடக்கும் போது சிரமமாக இருக்கும்.

 

7. கர்ப்பப்பை இலேசாக இறக்கம் கொள்ளும் போது இந்த அறிகுறிகளையும் தீவிரமாகவெளிப்படுத்தாது.அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது, பிரசவத்துக்கு பிறகு உடனடியாக அதிக எடைகளை தூக்குவது. அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது. உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து கர்ப்பப்பை இறக்கம் உண்டாகிறது.

40 வயதுக்கு பிறகு மாதம் ஒருமுறை கர்ப்பபை குறித்த முழுபரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.