இந்தியாவில் மக்கள் வரி செலுத்துவோர்களை கௌரவிக்கும் வகையில் நரேந்திர மோடி அவர்கள் பல புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளார்.தற்பொழுது அதிக விலை பொருட்களை வாங்கும்போது அதன் வரிகளை நேரடியாகப் பெற்றுக் கொள்ள ஏதுவாக தற்பொழுது மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைக்கு வருமான வரித்துறைக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு ஆணையை பிறப்பித்தது.இந்த விதிமுறையின்படி ரூபாய் .20 ஆயிரத்துக்கு மேல் ஹோட்டல் பில், 1 லட்சம் மேல் நகைகளும் ,ஒரு லட்சத்திற்கும் மேல் மின்சார கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசு நேரடி கண்காணிப்பில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தில் உள்நாட்டு விமான பயணம், வெளிநாட்டு பயணம், பள்ளி – கல்லூரி கட்டணம் ஆகியவற்றைக் ஒரு லட்சத்திற்கும் மேல் செலுத்துபவர்கள் வருமான வரி துறையின் கண்காணிப்பில் கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.