குறைந்தபட்ச மின்கட்டணம் தான் வசூலிக்க வேண்டும்!! மின்சார வாரியத்தின் உத்தரவு ரத்து..

0
216

கொரோனா பாதிப்பின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பல இடங்களில் இதே சூழல் தான் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கிடையே மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஊரடங்கு காலத்திலும் 90% மின்கட்டணம் செலுத்த வேண்டும் என தொழிற்சாலைகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 90% மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மின்சார வாரியத்தின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும், உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளில் குறைந்தபட்ச மின்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்தோடு கொரோனா முடியும் வரை குறைந்தபட்சம் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்ற ஆணையையும் நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

Previous articleஇனி வருமான வரி செலுத்தாமல் யாரும் தப்பிக்க இயலாது :? வருமான வரி துறையின் புதிய திட்டம்
Next articleஇனிப்பு சுவையூட்டும் வேம்பு கசாயம்தயாரிப்பது எப்படி:? தாய்மார்களே இது உங்களுக்கான டிப்ஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here