இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தனுஷ் தனது திறமையால் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்கிறார்.
துள்ளுவதோ இளமை படத்தில் தனது திரைபயணத்தை தொடங்கிய அவர், காதல் கொண்டேன் படத்தில் தனது திறமையை நிரூபித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் ஆடுகளம், அசுரன், கர்ணன், வடா சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தது அவரது புகழை மேலும் உயர்த்தியது. ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களுக்கு தேசிய விருதுகள் வென்று தனுஷ் தனது நடிப்பை இந்திய அளவில் நிரூபித்தார்.
தனுஷின் திறமையான நடிப்பு அவரை பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் முன்னணி நடிகராக மாற்றியது. ராஞ்சனா மற்றும் தி க்ரே மான் போன்ற படங்கள் சர்வதேச அளவில் அவரை அறிமுகப்படுத்தின. மேலும், Why This Kolaveri Di பாடலால் உலக அளவில் பரவலான புகழைப் பெற்றார்.
2004ல் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த தனுஷுக்கு, யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் திருமணம் நீண்டகாலம் வெற்றிகரமாக இருந்தபோதும், கருத்து வேறுபாடுகள் காரணமாக 2022ல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
சமீபத்தில் தனுஷின் ஒரு பழைய பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. 3 படத்தின் வெளியீட்டின்போது, சிவகார்த்திகேயனுடன் நடந்த பேட்டியில், தனுஷ் நகைச்சுவையாக, “ரஜினி சார் நடிப்பை பாராட்டியது உண்மைதான், ஆனால் பொண்ணு நம்மிடம் விழுந்துவிட்டது,” என்றார். இந்த பேட்டி அவரது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவதுடன், ரசிகர்களிடையே மீண்டும் வைரலாகியுள்ளது.