ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அனைத்தும் ஒரு தலைப்பட்சமானது!! முன்னாள் அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு!

0
278
Arumugasamy Commission
Arumugasamy Commission

ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அனைத்தும் ஒரு தலைப்பட்சமானது!! முன்னாள் அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரண வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்தது. இதில் முக்கிய குற்றவாளிகளாக சசிகலா முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய பெயர்களை சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்நிலையில் இன்று விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி அவர்களை சந்தித்து பேசினார். இதில் ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதில் அவர் கூறியதாவது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எங்களுக்கு தெய்வம் எங்களுடைய கடவுள், இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஆறுமுகசாமி ஆணையம் கூறியது மிகவும் தவறு. அவர்களுக்கு சாதகமாக அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். ஜெயலலிதா அம்மாவை இழந்து நிற்கும் இந்த தருவாயில் இவ்வாறு ஆறுமுகசாமி ஆணையம் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.

இது சட்ட ரீதியாக உள்ளதால் நேர்மையுடன் இதனை எதிர்கொள்வேன் என்று கூறினார். ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ள விஜயபாஸ்கர் ,வி கே சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரணை செய்ய வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழக அரசு நிர்ணயித்த டார்கெட்டை டாஸ்மாக் தொட்டு விடுமா? 2 நாளில் ரூ.464 கோடி!
Next articleஎனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது!! காதலன் செய்த வெறிச்செயல்