எல்லாம் கையை மீறி போகுது.. ஓரங்கட்டப்படும் முக்குலத்தோர்!! பிரஷர் பாயிண்டில் எடப்பாடி!!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் கவனம் பெரும் வகையில் இருந்தது என்றே கூறலாம்.மேலும் இத்தனை ஆண்டு காலம் தொய்வு பெற்றிருந்த அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் தற்பொழுது மேலோங்க ஆரம்பித்துள்ளது.இதனை தக்கவைத்துக் கொள்ளவும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள மீண்டும் ஆட்சியை கைப்பற்ற எந்த வகையில் கட்சியின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் அதுமட்டுமன்றி கடந்த முறை ஆட்சியில் என்னென்ன தவறுகள் நடந்தது உள்ளிட்டவற்றை கலந்தோசிக்கும் வகையில் நிர்வாகிகளுடேன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தனார்.
இதில் பலரும் கூட்டணி குறித்துப் பேசியதாக கூறுகின்றனர்.குறிப்பாக மாஜி அமைச்சர்கள் சிலர் தினகரன் சசிகலா ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனராம்.ஆனால் எடப்பாடியோ அதற்கு பிடிக்கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.தற்பொழுது இந்த பிரச்சனை தான் கட்சிக்குள்ளேயே சாதிய பிரச்சனையாக உருமாறி இருக்கிறது.நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் எதிர்பார்த்த ஓட்டுகள் விழாததால் எடப்பாடி பழனிச்சாமி அம் மாவட்ட அதிமுக செயலாளர் செல்லூர் ராஜிவிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
செல்லூர் ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டியில், நாங்கள் என்ன எம்.ஜி.ஆரா? ஜெயலலிதா வா? கூவி கூவி தான் ஓட்டு கேட்டோம் ஆனால் சிறுபான்மையினர் ஒரு பொழுதும் எங்களை நம்பவில்லை இவ்வாறு அவர் காட்டமாக பேசினார். அதுமட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் இரண்டாவது இடம் அதிமுக பெற்ற நிலையில் இந்த அமைச்சரை மட்டும் குறிவைத்து எடப்பாடி ஏன் கேள்வி கேட்க வேண்டும் என்று பலதரப்பினர் கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில் செல்லூர் ராஜு தினகரன் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முக்குலத்தோர் பிரிவை சார்ந்தவர்கள். அதனால் இவர்களை ஓரங்கட்ட நினைக்கிறாரா என்று உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. அதிகாரத்தன்மை மற்றும் கட்சிக்குள் சாதி பிரிவினை இருப்பதாக அதிமுக மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
ஆனால் மதுரை மாவட்டத்திற்கு ஆதிமுக ஆட்சியில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் 800 கோடி ரூபாய் நலத்திட்டங்களை செய்ததால் அவரை நோக்கி இவ்வாறன் கேள்விகள் முன்வைக்கப் பட்டதாகவும் அதேபோல ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் உட்கட்சியில் இருக்கும் போதே அடிதடி மோதலில் இறங்கியதால் அவர்கள் கூட்டணியே வேண்டாமென்று உள்ளதாக எடப்பாடி தரப்பு கூறுகிறது.