இனி அனைத்தும் ஆன்லைன் முறை தான்!! மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தற்போது அனைத்து தேவைகளுக்கும் பணத்தை மின்னணு முறையில் மட்டுமே செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசிக்கும் மக்கள் பலரும் தங்களது குடிநீர் வரி மற்றும் வீட்டு வரியை மின்னணு முறையிலேயே செலுத்தி வருகின்றனர்.
இந்த வரிகள் செலுத்துவதைத் தொடர்ந்து தற்போது மின்சார கட்டணமும் ஆன்லைன் வழியாகவே செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அனைத்தும் மின்னனுமயமாக்கப்பட்டாலும், ஊராட்சிகள் அனைத்திலும் மக்கள் குடிநீர் வரி, வீட்டு வரி மற்றும் நில வரி உட்பட்ட பல்வேறு வரிகளை பணமாகவே செலுத்தி வருகின்றனர்.
இதனால் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து ஊராட்சிகளிலும் இனி மின்னணு முறையில் மட்டுமே பணம் செலுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னணு முறையானது வருகிற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கட்டாயமாக தொடங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் யூபிஐ வசதி கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்த அந்த மாநிலத்தின் முதல்வர், எம்பி மற்றும் எம்எல்ஏ ஆகியோர்கள் தலைமை வகித்து நடத்த வேண்டும் எனவும் அறிவிப்பில் வெளியாகியுள்ளது.