எல்லாம் அயோக்கியத்தனம்.. ஜெமினி எப்படிப்பட்டவர்ன்னு தெரியுமா? – காந்தராஜ் ஓபன் டாக்

0
138

எல்லாம் அயோக்கியத்தனம்.. ஜெமினி எப்படிப்பட்டவர்ன்னு தெரியுமா? – காந்தராஜ் ஓபன் டாக்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி பறந்தவர் நடிகை சாவித்ரி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த அளவிற்கு தன் அழகாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சாவித்ரி. நடிகர் சிவாஜி கணேசனுக்கு இணையாக நடிகை சாவித்ரி தமிழ் சினிமாவில் நட்சத்திரமாக மின்னினார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். லேடி சூப்பராகவே சாவித்ரி வலம் வந்தார்.

அதேபோல், தமிழ் சினிமாவில், புகழ் வாய்ந்த நடிகராகவும், காதல் மன்னனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். இவர் தமிழ், இந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 200க்கு மேல் நடித்துள்ளார். ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி பெயர் பெற்றதால், ஜெமினி கணேசன் என்று பெயராக நிலைத்து விட்டது.

சாவித்ரி சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோது, நடிகர் ஜெமினி கணேசன் மீது காதல் கொண்டார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். அதன் பிறகு இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனக்கசப்பு உருவானது.

இவர்களின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரில் படமாக வெளியிடப்பட்டு சக்க போடு போட்டது. அப்படத்தில் ஜெமினியின் கதாபாத்திரங்கள் அவருக்கு எதிர்மறையாக இருந்தது. அதைப் பார்த்த ஜெமினி குடும்பத்தினர் ஜெமினி ரொம்ப நல்லவர். அவர் அப்படிப்பட்டவர் கிடையாது என்று வாதிட்டனர்.

சமீபத்தில் திரை விமர்சகரும், மருத்துவருமான காந்தராஜ் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது ஜெமினியை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ஜெமினியை எனக்கு நல்லாவே தெரியும். அவர் ரொம்ப நல்லவர். உண்மையில் சொல்லப்போனால், சாவித்ரியால்தான் ஜெமினி மிகவும் பாதிக்கப்பட்டார். ‘மகாநடி’ படம் வந்தபோது கூட, யாரை கேட்டு இப்படியெல்லாம் படம் எடுத்தீர்கள் என்று கேட்டேன். அப்படத்தில் ஜெமினியை தவறாக காட்டியுள்ளனர். தெலுங்குகாரர்கள் ஜெமினியை கெட்டவராகவும், சாவித்ரியை நல்லவராகவும் காட்டியுள்ளனர்.

இவ்வாறு அவர் மனம் திறந்து பேசினார்.

Previous articleபும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! என்றும் தல தான் பெஸ்ட் மத்தவங்களாம் வேஸ்ட்!!
Next articleஆசிய கோப்பை ரத்து? இறுதி கட்ட முடிவில் ஜெய்ஷா – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்