ஈவு இரக்கமற்ற பெற்றோர்? பெற்ற ஒரே மகனை பழிவாங்கிய சைக்கோக்கள்!..
மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன்.இவருடைய மாணவி கிருஷ்ணவேணி.இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். இவர்களுடைய மகன் மணிமாறன். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் வீட்டில் அவ்வப்போது சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில் அவரது தந்தை வீட்டிற்கு கோபித்து கொண்டு சென்றார்.மனைவியை பிரிந்த கணவன் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.மேலும் மணிமாறன் தினந்தோறும் மது குடித்துவிட்டு தாய் மற்றும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும்,
அவரது கொடுமையை தாங்க முடியாத முருகேசனும் அவனது மனைவி கிருஷ்ணவேணியும் மணிமாறனை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்த பின்னர் அவரது உடலை துணியால் கட்டி சைக்கிளில் வைத்து எடுத்து சென்று வைகை நதி கரையில் தீயிட்டு எரித்துள்ளனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாய் தந்தை இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெற்ற மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.