ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பேஸ்மேக்கர் மெஷின் பொருத்தப்பட்டது!! அதுவும் வேலை செய்யவில்லை!! அவரது நிலை என்ன பதறும் தொண்டர்கள்!!

0
238
EVKS Elangovan fitted with pacemaker machine!! That didn't work either!! What is his status panic volunteers!!
EVKS Elangovan fitted with pacemaker machine!! That didn't work either!! What is his status panic volunteers!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார்.

மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர பிரிவில் அனுமதிக்கபட்டனர். மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு உடல்நிலை பின்னடைவைச் சந்தித்த அவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.  மேலும் அவருக்கு அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தியயை அறிந்த முதல்வர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார். அவசர பிரிவு: இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டிருந்த இளங்கோவன், கிரிட்டிக்கில் கேர் யூனிட்டுக்கு அவசரம் அவசரமாக இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நமக்கு பிரத்யேகமான தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே இளங்கோவனுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது.

அந்த மெஷின் தற்போது வேலை செய்யவில்லையாம்.. இதனால், நுரையீரலில் தேங்கியுள்ள நீரையும் சளியையும் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்ல, மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், நார்மலுக்கு இன்னும் வரவில்லை என்றும், சீரியஸ் கண்டிசனில் தான் அவர் இருக்கிறார் என்றும் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான தரப்பிலிருந்து தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

Previous articleஇவர் மனுசனே இல்ல அசுர பேட்டிங்!!  இஷான் கிஷான் செய்த  உலக சாதனை சம்பவம்!!
Next articleபெண்கள் கெட்டுப் போவதற்கு அவர்களுடைய பெற்றோர் தான் காரணம்”! நடிகர் பாபூஸ் அளித்த அதிர்ச்சிப் பேட்டி!