ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் கவலைக்கிடம்!! மருத்துவமனை விரைந்த முதல்வர்!!

Photo of author

By Vinoth

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார்.

மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர பிரிவில் அனுமதிக்கபட்டனர். மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு உடல்நிலை பின்னடைவைச் சந்தித்த அவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.  மேலும் அவருக்கு அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தியயை அறிந்த முதல்வர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அவருடன் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் செய்தியாளர்களிடம் அவரது உடல்நிலை நேற்று சற்று பின்னடைவு ஏற்பட்டது. இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள் என தெரிவித்தனர்.