சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை சற்று முன்னேற்றம் மருத்துவர்கள் அறிவிப்பு.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார்.
மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தீவிர பிரிவில் அனுமதிக்கபட்டனர். மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு உடல்நிலை பின்னடைவைச் சந்தித்த அவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். மேலும் அவருக்கு அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 நாட்கள் முன்பு அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டிருந்த இளங்கோவன், கிரிட்டிக்கில் கேர் யூனிட்டுக்கு அவசரம் அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே இளங்கோவனுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், நுரையீரலில் தேங்கியுள்ள நீரையும் சளியையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அவரது உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்த்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.