நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய திமுக! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி!

0
105

சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் கலைவாணர் அரங்கத்தில் எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற அறையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தார்.

இன்று ஆரம்பித்த சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் செல்வபெருந்தகை கொடநாடு விவகாரத்தில் 55ஆவது விதியின்கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கான மனுவை கொடுத்தார்.

இந்த சூழ்நிலையில் ,இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும்போது அதனை சட்டப் பேரவையில் விவாதம் செய்ய இயலாது என்பது நடைமுறை. அதனையும் மீறி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவது சட்டத்திற்கு புறம்பானது என்று ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அத்துடன் நீதிமன்ற அதிகாரத்தை சட்டமன்றமும், அல்லது சட்டமன்ற அதிகாரத்தை நீதிமன்றமோ கையில் எடுக்க இயலாது. இந்த மரபை மீறி கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க இயலாது இது விதி மீறல் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleபாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகிறது! இந்தியாவில் இருந்து 54 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்!
Next articleநாளை மறுநாள் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டி! சாதனை படைப்பாரா பும்ரா!