கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அணை கட்டுவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாக விளங்கிவரும் காவிரியாற்றில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். நெல் உற்பத்தி குறையும் மேகதாது அணை காரணமாக தமிழ்நாட்டிற்கு உண்டாகும் பாதிப்பை தமிழக அரசு தொடர்ச்சியாக எடுத்து கோரியும் கர்நாடக அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
இந்த நிலையில், மேகதாது அணை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது இதில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் மூலமாக மத்திய அரசிடம் நேரில் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் குழு நேற்றையதினம் டெல்லிக்கு சென்றது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் குழு மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து பேச இருக்கிறார்கள். அதோடு பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் சந்தித்து பேச இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மான நகலை பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அனைத்து கட்சி குழுவினர் வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லி செல்வதற்கு முன்னர் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது மேகதாது அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுக்கும் எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அதிமுக முழுமையாக ஆதரிக்கும் தமிழ்நாட்டிற்கு வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.