வெளியான அதிர்ச்சி செய்தி! கவலையில் புதுச்சேரி ஆளுநர்!

0
85

புதுச்சேரி மாநிலத்தில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் இதமாக புதுச்சேரியின் ஆளுநர் மாளிகையில் வாரம் ஒரு முறை நோய்தொற்று மேலாண்மை சீராய்வு கூட்டம் நடந்து வருகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இந்த சீராய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றினார்.

கடந்த ஒரே வாரத்தில் புதுச்சேரி மாநிலத்தில் 21 குழந்தைகள் நோய்த்தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி கவலை தருகிறது. ஒவ்வொரு நிமிடமும் நாம் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும், இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.21 குழந்தைகள் நோய் தொற்று காரணமாக, பாதிக்கப்படுவது தொடர்பாக முழுமையான தகவல் அடங்கிய ஒரு ஆய்வறிக்கை கொடுக்க வேண்டும். மருத்துவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் மிக சிறப்பான சிகிச்சையின் மூலமாக குழந்தைகளை ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றி இருக்கிறது.

இதை போன்ற ஒரு நிலையை நாம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தற்சமயம் நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும் எந்த சமயத்தில் வேண்டுமானாலும் நோய்த்தொற்று மூன்றாவது அலை புதுச்சேரியை தாக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் நாம் எல்லோரும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.எல்லா குழந்தைகள் நல மருத்துவர்களும், பொதுநல மருத்துவர்களும், குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படுகின்றதா என்பதை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அந்தக் கூட்டத்தில் உறுதிபட தெரிவித்து இருக்கின்றார்.