நோய் தொற்று குறித்து பரபரப்பு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர்!

0
139

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கின்ற நோய் தொற்று சிகிச்சை மையத்தை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தினம் ஆய்வு செய்து இருக்கிறார். அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டின் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருவது நமக்கு சற்று நிம்மதியைத் தந்தாலும் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரும் சமயத்தில் இழப்பு சற்று அதிகமாக இருப்பது கவலை தருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக, இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக தமிழக அரசு உடனடியாக அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாட்டில் அதிகமாகி வரும் நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாவிதமான மருந்துகளையும் தயார் நிலையில் வைத்திருந்து ஏற்படும் இழப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருக்கிறார்.

கிராமங்களில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கின்ற தடுப்பூசியை தயார் செய்யும் மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை மொத்த தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. அந்த மையத்தை அதிமுக ஆட்சியில் ஆய்வு செய்து செயல்படுத்துவதற்கு மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்தோம் ஆகவே இந்த மையத்தை எடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

Previous articleகருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு எதனால் ஏற்படுகிறது? பாதுகாத்துக் கொள்வது எப்படி?
Next articleஇவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! ஸ்டாலின் அதிரடி உத்தரவு!