மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி.!!

Photo of author

By Vijay

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி.!!

Vijay

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன்சிங் அவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.