முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை!

0
243

முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (66). இவர் ராணுவ வீரராக பணிபுரிந்தவர். இவருடைய தோட்டமானது ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாரியப்பன் தொளசம்பட்டியில் உள்ள அவருடைய தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அதனையடுத்து ஓமலூர் பேருந்து நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் அருகே வந்து கொண்டிருந்தார். அதே பகுதியில் டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த டிராக்டர் ஆனது மாரியப்பன் வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. அந்த விபத்தில் சிக்கி மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இது குறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஇவர்களுக்கெல்லாம் ரூ.15 லட்சம் மற்றும் வேலை! அரசின் அதிரடி நடவடிக்கை!
Next articleஎன் வாழ்வும்!!என் சாவும் நீதானடி!!..சினிமாவை போலவே நிகழ்ந்த கணவன் மனைவி பிரிவு?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here