வெளியான தேர்வு முடிவுகள்.. 30 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை..!!
ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுபோன்ற தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்காக மாணவர்களுக்கு எவ்வளவு ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் அதில் எந்த பயனும் இல்லை.
அந்த வகையில் 30 மணி நேரத்தில் மட்டும் 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளை சுமார் 9.8 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இதற்கான முடிவுகள் கடந்த 24 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் தேர்வில் தோல்வி அடைந்ததால் தேர்வு முடிவுகள் வெளியான 30 மணி நேரத்தில் மட்டும் 7 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தூக்கிட்டு மற்றும் கிணற்றில் குதித்து இந்த மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் இந்த ஆண்டு ஜேஇஇ முதன்மைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள். அதன்படி தேர்வில் தேர்ச்சி பெற்ற 56 பேரில் 15 பேர் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் தான். அதுமட்டுமல்ல கடந்த மூன்று ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலம் ஜேஇஇ தேர்வில் அதிக அளவிலான டாப்பர்களை கொண்டுள்ளது.
இப்படி உள்ள சூழலில் பள்ளி தேர்வில் தோல்வி அடைந்ததற்காக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.