மகளை காணவில்லை என தாயார் புகார் கொடுத்ததால் பரபரப்பு !!

Photo of author

By Parthipan K

குளித்தலை பகுதியில் தனியார் டெக்ஸ்டைல் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என காவலரிடம் தாயார் புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை அடுத்த வைகை நல்லூர் பகுதியில் புதூர் கிராமத்தைச் சேர்ந்த வைரம்மாள் என்பவருக்கு மகாலட்சுமி உள்ளார் .இவர் தற்பொழுது வை.புதூர் பகுதியிலுள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு கூலி வேலைக்கு சென்று வருகிறார் .இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற மகாலட்சுமி (20) என்பவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அச்சம் அடைந்த தாய், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால் மகளைக் காணவில்லை என தாயார் குளித்தலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் குளித்தலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.