இறந்த பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு?

Photo of author

By Parthipan K

இறந்த பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு?

Parthipan K

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பெண்ணின் அடையாளங்களை போலீஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியீட்டு இந்த பெண்ணை தெரிந்தவர்கள் காவலர்களிடம் தகவல் அளிக்கலாம் என்று கூறப்பட்டது.

இன்னிலையில் அலிகரையைச் சேர்ந்த தாய் ஒருவர் சூட்கேசில் இருப்பது தனது மகள் என்றும் இவர் பெயர் வாரிசா என்றும் கணவன் மற்றும் மாமியாரின் கொடுமையால் கடந்த 24-ஆம் தேதி அவர் காணாமல் போனதாகவும் கூறி அடையாளம் காட்டினார்.

தாய் அளித்த புகாரின் அடிப்படையில் மாமியாரும் கணவரும்தான் கொடுமைப்படுத்தி இந்த பெண்ணை கொன்றுவிட்டதாக கடந்த 28 ஆம் தேதி அன்று அவர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.இந்தக் கொலையில் விரைவில் கண்டுபிடித்ததற்காக காசியாபாத் போலீஸ் குழுவிற்கு ரூ 15,000 பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிலையில்தான் கொலை செய்யப்பட்டதாக கூறிய அந்த பெண் திடீரென்று உயிருடன் திரும்பி வந்துள்ளார்.இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது தனது மாமியார் மற்றும் கணவரின் கொடுமை தாங்காமல் நான் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் ஒரு தனியார் நிறுவனத்தில் தான் வேலை புரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் போலீசாரிடம் பொய்யான அடையாளம் காட்டிய அந்தப் பெண்ணின் தாயின் மீதும் அவருடைய சகோதரர்மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.