தமிழகத்தில் எடப்பாடியாரின் ஆதரவை சரிக்க திமுக போட்ட திட்டம்!

Photo of author

By Sakthi

மத்திய அரசு கொண்டு வந்து இருக்கின்ற விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள். அதன் உச்சகட்டமாக கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அதில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதோடு பல விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்தார்கள்.
அதோடு மத்திய அரசு சார்பாக விவசாயிகளிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருந்தாலும் மத்திய அரசு நடத்திய எந்த பேச்சுவார்த்தையும் விவசாயிகளை சமாதானப்படுத்தவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இது இந்திய அளவில் கவனிக்கப்பட்டது. அதோடு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வந்தார்கள்.

ஆனால் எவ்வளவு போராட்டம் நடத்தினாலும் சரி மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. இதனால் வெறுத்துப்போன விவசாயிகள் பாஜக மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.இந்த நிலையில், விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் தொடர்பான வேலைகளை ஆளுங்கட்சியான அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் பாஜக விற்கு எதிராக நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தைப் போலவே தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை கொண்டு வருவதற்கு எதிராக விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வந்தார்கள்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, செங்கம் ஆகிய இடங்களில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வருகையின் பொழுது காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி விவசாயிகள் கருப்பு கொடி காட்டினார்கள்.இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கருப்புக்கொடி போராட்டமானது எதிர்கட்சியான திமுக வின் சதி என்றுதான் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் எப்படியாவது அதிமுகவை தோல்வியுறச் செய்து தான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மிகத் தீவிரமாக இருந்து வருகிறார். அதற்கான வேலைதான் இது என்று சொல்லப்படுகிறது.

தமிழகம் முழுவதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இது போன்ற சித்து விளையாட்டுகளை ஆங்காங்கே nigazh வருகிறார் அதோடு வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கொடுத்ததில் இருந்து வன்னியர்களுக்கு இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கான ஆதரவு பெருகி வருகிறது இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சியான திமுக மற்ற ஜாதியினரை தூண்டிவிட்டு அவர்கள் மூலம் வழக்குப் போட்டு இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடலாம் என்று எண்ணி பல்வேறு சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறது.

இப்படி அதிமுகவை எந்த வழியில் சரிக்கலாம் என்று திட்டம் போட்டு நாலாபுறமும் செயல்பட்டு வரும் திமுகவை தாண்டி இந்த முறை அதிமுக ஆட்சி அமைத்து முதல்வர் நாற்காலியில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆவாரா என்பதே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது.