சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றவர்கள்!
சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி பகுத்தியை சேர்ந்தவர் வெள்ளையன் (66). இவருடைய மனைவி முன்சி. இவர்களின் மகன் செல்வம். இந்த குடும்பத்திற்கு சொந்தமான 40 செண்டு நிலத்தை சிலர் போலியானங்களை தயாரித்து வேறு நபருக்கு விற்பனை செய்து விட்டனர்.
இது பற்றி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால். நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வெள்ளையன் மற்றும் அவரது மனைவி முன்சி மகன் செல்வம் மற்றும் உறவினர் செல்வி (40), சித்ரா (50), சிவகாமி (50), நவமணி (40) மற்றும் நந்தினி ஆகியோர் வந்தார்கள்.
மேலும் இதில் சிவகாமி, தவமணியை தவிர மற்ற ஆறு பேரும் தங்களது நிலத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்து விட்டதாக கூறி கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் முன்பு நின்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்கள். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். தீக்குளிக்கும் முயன்ற வெள்ளையன் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
மேலும் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சேலம் மாவட்டம் பெரிய கவுண்டபுரத்தைச் சேர்ந்தவர் குமார் (37) இவரது மனைவி சங்கீதா மற்றும் இரு குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்கள். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை இட்டபோது ஒரு பாட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி எடுத்து வந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தார்கள். விசாரணையில் நிலப் பிரச்சினையை தொடர்பாக அந்த தம்பதி தீக்குளிக்கும் எண்ணத்தில் வந்திருப்பதாக போலீசாரணம் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் பரபரப்பில் உள்ளார்கள். இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் இவர்களைப் போல் இனி யாரும் தீக்குளிக்க முயற்சி செய்தல் கூடாது. இதனை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.