பரபரப்பை கிளப்பும் நோ என்ட்ரி பட  போஸ்டர்! தலைகீழாக தொங்கும் ஆண்ட்ரியா!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ் சினிமாவில் மிகவும் ஈர்க்கப்படும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அசால்டாக நடிப்பார்.

இவர் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் சற்று வேறுபட்டே இருக்கும்.மேலும் மக்களின் மனதில் இடம் பிடித்ததற்கு  இது ஒரு பெரிய காரணமாகும் 

ஆண்ட்ரியா தற்போது சோலோ ஹீரோயினாக நடிக்கயிருக்கும் திரைப்படம் நோ என்ட்ரி.இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் இதில் கொடூரமான 14 வெறிநாய்களுக்கு மத்தியில் யாரோ ஆண்ட்ரியாவை தலைகீழாக கட்டி தொங்க விட்டது போன்ற நிகழ்வினை போஸ்டராக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.ஹனிமூனுக்கு செல்லும் இளம் தம்பதியினர் கொடூரமான 14 பேரின் வெறிநாய்களிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கிறார்கள் என்பதுதான் நோ என்ட்ரி படத்தின் மூலக்கதை. ஒரு நடிகையின் படத்துக்கு இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுதான் முதல் முறை.