பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிரடியான திட்டம்!! போட்டி போட்டு அள்ளிக் கொடுக்கும் நிறுவனங்கள்!!

Photo of author

By Gayathri

அரசுக்கு சொந்தமான bsnl நிறுவனமானது ஜியோ மற்றும் ஏர்டெல் விட மிகக் குறைந்த விலையில் பல திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது 600 ஜிபி டேட்டா என்ற புதிய திட்டத்தையும் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் கடுமையான விலை ஏற்றத்தை நடைமுறைப்படுத்தின. இதனால், மக்கள் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்கள் தங்களுடைய நெட்வொர்க்கை bsnl ஆக மாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

600gb டேட்டா பிளானிங் முக்கிய அம்சங்கள் :-

✓ BSNL நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள திட்டம் தான் பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் (BSNL Rs 2999 Plan). இந்த திட்டம் 1 வருடம் செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL 1 year validity plan) உடன் வருகிறது. அதாவது முழுமையாக ஒரு ஆண்டிற்கான சேவையை 365 நாட்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது.

600GB டேட்டா தீர்ந்த பிற்பாடு, இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டா இலவசமாக (unlimited data benefits) வழங்கப்படும்.

✓ இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited coice calls) நன்மையை வழங்குகிறது.

✓ இத்துடன் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் மக்கள் பெறுகிறார்கள்.

✓ ரூ. 2999 திட்டம் உங்களுக்கு OTT நன்மை மற்றும் இதர இலவச நன்மைகளையும் இந்த திட்டத்துடன் வழங்குகிறது.

✓ இந்த பிஎஸ்என்எல் ரூ. 2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 Prepaid Plan) 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் EROS NOW Entertainment சந்தாவை வழங்குகிறது.

ஈரோஸ் நொவ் எண்டெர்டைன்மெண்ட் (Eros Now Entertainment) மூலம் பயனர்கள் பல டிவி சேனல் (TV channels) உள்ளடக்கங்களை வழங்குகிறது. திரைப்படங்கள் (movies) மற்றும் சில ஆன்லைன் நிகழ்ச்சிகளை கண்டு மகிழ இந்த திட்டம் ஏற்றது.

✓ இலவச BSNL டியூன்ஸ் (free BSNL tunes) சந்தாவையும் வழங்குகிறது.

மேலும் கூடுதல் டேட்டா தேவைப்படும் பொழுது, பிஎஸ்என்எல் இன் டேட்டா வவுச்சர்களை (BSNL data vouchers) பயன்படுத்தி டேட்டா பேலன்சை அதிகரித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.