கள்ளச்சாராயமால் கிடைத்த தூக்கு தண்டனை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Photo of author

By Rupa

கள்ளச்சாராயமால் கிடைத்த தூக்கு தண்டனை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Rupa

Execution for possession of counterfeit liquor! Family in shock!

கள்ளச்சாராயமால் கிடைத்த தூக்கு தண்டனை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

பீகார் மாநிலத்தில்  வசிப்பவர்கள் தான் நாட்டிலேயே அதிக அளவு மது அருந்துபவர்கள் என்று கணக்கெடுப்பில் கூறுகின்றனர்.அதிலும் பீகார் நகர்புறங்களை விட கிராமபுற மக்களே அதிக அளவு மது அருந்துவதாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது.இந்நிலையில்  மக்களின் நலன் கருதி பீகார் அரசாங்கம் மது விற்பதற்கு தடை விதித்திருந்தது.தடைவிதித்த நிலையிலும் மக்கள் ப்ளாக்கில் கிடைக்கும் சரக்குகளை வாங்கி அருந்த ஆரமித்துவிட்டனர்.இதனை கட்டுபடுத்தும் விதமாக போலீஸ் அதிகாரிகர் அங்காங்கே ஆய்வுகள் நடத்த ஆரமித்தனர்.

ஆய்வு செய்ய வேண்டிய அரசு அதிகாரிகளே மதுவிற்கு அடிமையகியுள்ளதால் சோதனையில் ஈடுபடாமல் மது விற்பவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தனர்.இந்நிலையில் நாட்டையே உளுக்கும் விதமாக ஒரு தகவல் வெளி வந்தது.மது விற்பதற்கு தடை விதித்த நிலையில் கிராமப்புற மக்கள் கள்ளச்சாராயம் காய்த்து விற்று வந்துள்ளனர்.அதை குடித்த கிராமப்புற ஆண்கள் 19 பேர் ரத்தம் கக்கி மயங்கி விழுந்து இறந்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் ஆறு பேருக்கு கண் பார்வை பறிபோனது.இந்த சம்பவமானது பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள  கஜுர்பானி என்ற கிராமத்தில் நடைபெற்றது.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  தலா ரூ.500000 மாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மற்றும் இதற்கு ஆதரவாக  இருந்த காவல் ஆய்வாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.கள்ளச்சாரயத்தை காட்சிய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும் அங்கிருந்து  1000 லிட்டருக்கு அதிகமான கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றவாளிகள் 9 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்பட்டுள்ளது.மேலும் 5 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையை அறிவித்துள்ளது.இதை எதிர்த்த குற்றவாளிகளின் வழக்கறிஞர் நான் பாட்ன உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போகிறேன்  என்று கூறியுள்ளார்.