நாளை நீட் தேர்வுக்கு விலக்கு! இன்று ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து!!

Photo of author

By Parthipan K

நாளை நீட் தேர்வுக்கு விலக்கு! இன்று ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து!!

தமிழக சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழக அரசு சார்பில், தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், அந்த தீர்மானம், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீர்மானம் அனுப்பப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பக்கமாக ஆன நிலையில் ஆளுநர், இதுகுறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்தார்.

இந்நிலையில், அண்மையில், தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு தொடர்பான அந்த மசோதாவை நிராகரித்து, தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் தற்போது பூதாகரமாகியுள்ளது.

இதற்கிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மூன்று நாள் பயணமாக இன்று காலை டெல்லி செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தப் பயணத்தின் போது, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை, ஆளுநர் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

ஆளுநர் டெல்லி செல்லும் காரணத்தால், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் வரும் 8 ஆம் தேதி (நாளை) மீண்டும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது ஒருவித சந்தேககத்தை ஏற்படுத்தியுள்ளது.