பீரியட்ஸ் டைமில் வாயு பிரச்சனையை அனுபவிக்கிறிர்களா? இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் கைகொடுக்கும்!!

Photo of author

By Rupa

பெண்களுக்கு மாதம் ஒருமுறை மாதவிலக்கு ஏற்படுகிறது.அந்நேரத்தில் பெரும்பாலான பெண்கள் வயிற்றுவலி,அதிகப்படியான உதிரப்போக்கு,வாயுத் தொல்லை,உடல் சூடு உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

சிலருக்கு வயிறு உப்பசம்,மலச்சிக்கல்,வாயுப் பிரச்சனை ஏற்பட்டு அசௌகரிய பிரச்சனையை ஏற்படும்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் ஒன்றை பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள்:

1)வெந்தயம்
2)தேன்
3)நீர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு வெந்தயம் போட்டு லேசாக வறுக்கவும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.அரை கப் அளவிற்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.இந்த பானத்தை கிளாஸிற்கு வடித்து தேன் சேர்த்து பருகினால் மாதவிடாய் வாயுத் தொல்லையில் இருந்து விடுபட முடியும்.

தேவையான பொருட்கள்:

1)திப்பிலி
2)அஸ்வகந்தா
3)தண்ணீர் விட்டான் கிழங்கு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பொருட்களும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை சம அளவு வாங்கி பொடித்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அரைத்து வைத்துள்ள மூலிகை பொடி ஒரு ஸ்பூன் அளவு அதில் போட்டு கொதிக்க விடவும்.சிறிது நேரம் கொதித்த பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் வாயுத் தொல்லை சரியாகும்.

தேவையான பொருட்கள்:

1)புதினா
2)இஞ்சி
3)தேன்
4)தண்ணீர்

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடேற்றவும்.பிறகு ஐந்து புதினா இலைகள் மற்றும் இடித்த இஞ்சி ஒரு துண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை அகலும்.