போலி ரேஷன் அட்டைகளை களையெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ள நிலையில், பயணங்கள் தங்களுடைய ரேஷன் அட்டைகளுக்கு e KYC முடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதற்கான கடைசி நாளாக பிப்ரவரி 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தங்களுடைய ரேஷன் அட்டைகளுடன் இ கேஒய்சி யிணை பயணங்கள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், 70 லட்சம் பயனர்களுடைய ரேஷன் அட்டைகள் இரத்தாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. ரேஷன் அட்டைகள் இரத்தான பிறகு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி கோதுமை சர்க்கரை பருப்பு எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
e – KYC முடிக்க இரண்டு எளிய வழிமுறைகள் :-
✓ பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் அட்டைகளுக்கு இ கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ ரேஷன் அட்டைதாரர்களின் உடைய செல்போன்களில் வரக்கூடிய ஒருமுறை கடவுச்சொல் OTP ஐ பயன்படுத்தி எளிமையான முறையில் இ கேஒய்சி முடிக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கெடு கொடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 70 லட்சம் பயனர்கள் தங்களுடைய ரேஷன் அட்டைகளுக்கு இ கேஒய்சி அப்டேட் ஆனது மேற்கொள்ளவில்லை எனவும் அதனால் வருகிற பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பிறகு அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய போவதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.