வெடித்து சிதறிய மிக்சி!! பார்சலில் வந்த பகீர் ஆபத்து!

Photo of author

By Amutha

வெடித்து சிதறிய மிக்சி!! பார்சலில் வந்த பகீர் ஆபத்து!

கூரியர் நிறுவனத்திற்கு வந்த பார்சல் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூரியர் கடை உரிமையாளர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கர்நாடக மாநிலத்தை அடுத்த ஹாசன் பகுதியை சேர்ந்தவர் சசி. இவர் ஆர்.கேபுரம் பகுதியில் சொந்தமாக கூரியர் நிறுவனம் ஒன்றினை வைத்துள்ளார். இவரது கூரியர் நிறுவனத்திற்கு பார்சல் ஓன்று வந்துள்ளது. அதனை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நபர் வாங்கிச் சென்று இந்த பார்சல் சரியான முகவரிக்கு வரவில்லை என மீண்டும் சசியின் கடையில் கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர்-26) இரவு 7:30 மணி அளவில் திருப்பி அளவில் திருப்பிக் கொடுக்கப்பட்ட பார்சலானது திடீரென வெடித்து சிதறி உள்ளது. இந்த வெடி விபத்தில் கூரியர் அலுவலகத்தில் இருந்த அதன் உரிமையாளர் சசிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.அவரின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஹாசன் பகுதி போலீசார் மற்றும் தடயவியல் வல்லுனர்கள் குழு ஆதாரங்களை சேகரித்தனர். சில நாட்களுக்கு முன்னர் மங்களூர் இரயில் நிலையத்தின் அருகே குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடை பெற்ற நிலையில் தற்போது மிக்சி வெடித்து சிதறியது கர்நாடகாவில் பெறும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.