மீண்டும் இரண்டு காரில் குண்டு வெடிப்பு! 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
கிழக்கு ஆப்ரிக்கா நாடான சோமாலியா தலைநகர் மோகதீஷீவில் கல்வி அமைச்சகத்தின் முன்பு வாகனங்கள் நிற்பது வழக்கம் தான் அவ்வாறு கல்வி அமைச்சகத்தின் முன்பு நின்று கொண்டிருந்த காரில் குண்டு வெடித்தது.அந்த சம்பவத்தில் அங்கிருந்த பொது மக்கள் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர்.இது தொடர்பாக மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு காரிலும் குண்டு வெடித்தது.இந்த விபத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.அதனையடுத்து இந்த தாக்குதலில் குழந்தைகள் ,பெண்கள் ,தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர்.
மேலும் அதிபர் கூறுகையில் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷாப் என்ற அமைப்பு தாக்குதலை நிகழ்த்தியிருக்க கூடும் என குற்றம் சாட்டினார்.இந்த இரட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவரும் உயிரிழந்தார்.செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தலான நாடாக சோமாலியா உள்ளது.